2025 தீபாவளி வெளியீட்டு தமிழ் திரைப்படங்கள்: புதிய நட்சத்திரங்கள், பலவகை கதைகள்!

2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல்வேறு வகையான திரைப்படங்கள் திரையரங்குகளில் பைசன், டீசல், டியூட், கார்மேனி செல்வம், கம்பி கட்ன கதை போன்ற படங்கள் இந்த தீபாவளியில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

Love Matrimony

 

🎬 திரை வெளியீடுகள்

  • பைசன் (Bison)
    சமூக சிந்தனையுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த பத்தில் த்ருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேசுவரன், மற்றும் ரசிசா விசயன் நடிக்க, விளையாட்டு மற்றும் அரசியல் பின்னணியைக் கொண்ட திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் தீபாவளி வாரத்தில் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
  • டீசல் (Diesel)
    ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி நடிக்கும் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தை ஷண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். வினய் ராய் வில்லனாக நடித்துள்ளார். இசை: திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு: எம். எஸ். பிரபு மற்றும் ரிச்சர்ட் எம். நாதன், தொகுப்பு: சான் லோகேஷ். படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
  • டியூட் (Dude)
    காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆர்.சரத்குமார் நடிக்க, கீர்த்திசுவரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
  • கார்மேனி செல்வம்
    இரு நண்பர்களை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான படம். இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் Green Book திரைப்படத்துடன் சமூகவலைதளத்தில் ஒப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

karmeniselvam tamil film 

 

  • கம்பி கட்ன கதை
    சமூக விமர்சனத்தை நகைசுவை உணர்வுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி நட்ராஜ், சிங்கம்புலி மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்க ராஜநாதன் பெரியசாமி இயக்கியுள்ளார். படம் படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

kambikatnakathai 

 

 

🌟 புதிய தலைமுறை நட்சத்திரங்கள்

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடுகளில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இல்லாதபோதிலும், புதிய தலைமுறை நடிகர்கள் களமிறங்கியுள்ளனர். இது தமிழ் சினிமாவில் உள்ள உள்ளடக்க மையமுள்ள மாற்றத்தை பிரதிபலிக்கிறது. த்ருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய் பல்லவி போன்றோர் இந்த மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

தீப ஒளித்திரை:
2025-
ஆம் ஆண்டு தீபாவளி தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. புதிய கதைகள், புதிய முகங்கள், பல்வேறு வகைத் திரைப்படங்கள் என ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ப திரையரங்கிலும், வீட்டிலிருந்தபடியே OTT-யிலும் இந்த படங்களை அனுபவிக்கலாம்!