64 போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு நாளை நோக்கி மக்கள் எதிர்பார்ப்பு !

 

Love Matrimony

2017-ஆம் ஆண்டு அலங்கா நல்லூரில் சல்லிகட்டு நடத்த வேண்டும் எனவும்பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் மக்கள் முன்னெடுத்த போராட்டம் நாடெங்கும் பரவி பல நாட்கள் போராட்டம் தொடந்து நடைபெற்று அரசிற்கு அழுத்தம் பெற்று. தமிழ் நாட்டு மக்களுக்கு சல்லிகட்டை மீண்டும் நடத்தும் உரிமையை பெற்று தந்தது. அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்ஆதரவு தந்த அலங்கா நல்லூர் மக்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என 64 பேர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

 

  • போராட்டக்காரர்கள் மீது மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
  • வழக்கை திரும்ப பெற 2017 முதல் ஆண்ட மற்றும் ஆளும் அரசுகளிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டாலும், “என்ன சட்ட சிக்கலோ!?” எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • இதனால்வழக்கு சுமார் ஆண்டுகளாக நீடித்து வந்தது.

 sallikattu case

⚖️ தற்போதைய நிலை

  • 2026 ஜனவரி 29 அன்றுநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
  • 2017-இல் தொடங்கிய வழக்குஇப்போது தீர்ப்பை நோக்கி சென்றுள்ளது.

 

🙏 மக்கள் எதிர்பார்ப்பு

  • நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என சல்லிகட்டு போராட்ட வழக்கு குழுவினர், அலங்கா நல்லூர் மக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சல்லிகட்டு ஆதரவாளர்கள், பொதுமக்கள், என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
  • சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள்தீர்ப்பை எதிர்நோக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன.
  •