
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்கலையும் அந்தந்த மாநில அரசு தன் கட்டுப்பட்டில் கொண்டு வந்து நிவாகிக்க வேண்டும்.
வழிபாட்டு தலங்கள் சார்ந்த குற்றங்கள்
• தர்மஸ்தலா கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் கொன்று புதைப்பு போன்ற குற்றங்கள்,
• தமிழகத்தில் வன நிலக்கங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக பலருக்கும் தெரிந்த கொவையை சேர்ந்த தனியார் வழிபாட்டு தளத்தை சுற்றி எழும் புகார்கள் மேலும் குழந்தைகள் காணாமல் போனதாகவும் அரசு அனுமதியின்றி மின் தகன மேடை [மின்சுடுகாடு] இருப்பதாக வார இதழ்களில் வந்த செய்திகள். சர்ச்சைகள்
• சாதிய காரணங்களால் பல்வேறு கோவில்களில் கோவில் நுழைவு மற்றும் வழிபாட்டு உரிமை பரிப்பு போன்ற குற்றங்கள்.
• மேலும் பல கோவில்கள் சாதிய காரணத்தால் பூட்டப்பட்டு கிடக்கும் அவலங்கள்.
· அரசுவசம் இல்லாத பல பழங்கால கோவில்களின் நிலங்கள் முறயற்று விற்கப்பட்டும் ,ஆபரணங்கள் போலியான தாக மாற்றப்பட்டும் இருக்காலாம் என ஆன்மீகவாதிகள் சுட்டிக்காட்டு இருக்கிறார்கள்.
பயன்கள்
சாதிய பாகுபாடற்ற அனைத்து பக்தர்களும் மனநிறைவான, அமைதியாக வழிபட பெரும் வாய்ப்பு ஏற்படும்.
சாதிய மோதல் மற்றும் உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்க்கப்படும்.
வழிபாட்டு தலங்கள் சார்ந்த அரசு வேலை வாய்ப்புகள் பெருகும். பக்தர்களின் காணிக்கை சுரண்டல் தடுக்கப்பட்டு மற்றும் வழிபாட்டு தளங்களில் விற்பனை செய்யும் பொருட்களின் விலை நிர்ணயம் வழியாக பக்தர்களின் பணம் சேமிக்கப்படும்.
கோவில் நுழைவு சட்டம்
கோவியில் நுழைவு அதிகார சட்டப்படி பிரிவு 3 கீழ் இந்துவாக உள்ள அனைவரும் பொதுக் கோவிலில் நுழையவும் வழிபடு செய்யவும் அனைத்து விதமான சடங்குகள் சம்பிராயங்கள் செய்யவும் உரிமை உண்டு.
இந்து சமய அறநிலையத்துறை தோற்றம்
இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22, ஜனவரி 1960, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது.
வாசகர் கருத்து என்ன
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்கலையும் அந்தந்த மாநில அரசு தன் கட்டுப்பட்டில் கொண்டு வந்து நிவாகிக்க வேண்டும். என்பது பற்றிய வாசகர்களாகிய உங்கள் கருத்து என்ன ?

