சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், இறுதி ஊர்வலத்தில் அலட்சியமாக பட்டாசுகளை தூக்கி வீசியதில், ஆட்டோவில் பயணம் சென்ற 10 வயது சிறுமியின் முகம் சிதைவு. தடைசெய்யப்பட்ட நாட்டு வெடிகள் பயன்படுத்தியதாக சிறுமியின் தாயார் கண்ணீர்மல்க குற்றச்சாட்டு, தமிழக முதல்வருக்கு கோரிக்கை !
வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33) என்பவரை போலீசார் கைது செய்துதனர் , வினித் (24) என்பவரை தேடி வருகின்றனர்.
இறுதி ஊர்வலங்களில் அமைதியாக செல்லாமல் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி வீசுவதும், அதீத ஒலி கொண்ட பட்டாசுகளை தொடர் சங்கிலி போல வெடித்து பொதுமக்களுக்கு வயதானவர்கள், இருதய நோயாளிகள், ஆடு மாடு, நாய் மற்றும் பறவைகள் உள்பட துன்புறுத்தி சென்றால் இறந்தவர் ஆன்மா அமைதி பெறுமா..!
மேலும் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்த கொண்டு வரும் பூமாலைகளை இறுதி ஊர்வலம் முழுக்க பூமாலைகளை வழி நெடுக சிதைத்து போடுவதும் முழு மாலைகளை கண்டபடி தூக்கி வீசுவதும், குறிப்பாக மின்சார கம்பிகள் மீது தூக்கி வீசுவதையும் பொதுமக்களாகிய நாம் தான் தவிர்க்க வேண்டும்.

பூமாலைகள் சாலையில் வீசுவதால் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் பூக்களில் டயர் பட்டதும் வலுவலுப்பு ஏற்பட்டு தடுமாறி விழுகின்றனர். இறுதி ஊர்வலம் தெருவில் போகும் போது பூக்கள், பூமாலைகளை போடுவதால் தெருவில் உள்ளவர்கள், தெருவை கூட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. வீட்டு வாசலில் இறுதி ஊர்வல பூக்கள், பூமாலைகள் கடப்பது பலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். இது நம் வீட்டில் இப்படி இருந்து நாம் அதை அப்புறபடுத்தும் நிலை ஏற்பட்டால் தான் புரிந்துகொள்ள முடியும்.
பூமாலைகளும் மின்சாரக் கம்பிகளுக்கும் அப்படி என்ன பினைப்போ என்று தெரியவில்லை, இறுதி ஊர்வலத்தில் அமைதியாக செல்லாமல் மின் கம்பியின் மீது மாலைகளை தூக்கி எறிந்து வீசுவது என்பது ஏதோ நம் பாரம்பரியம் போல பலர் கடைப்பிடிக்கிறார்கள். பூ மாலைகள் ஈரப்பதம் உள்ளவை எளிதில் ஈர்ப்புத்தன்மை கொண்டவை இதனால் மின் கம்பிகள் ஒன்றையொன்று தொடர்பட்டு மின்சார துண்டிப்பு மிங்கலன் [டிரான்ஸ்ஃபார்மர்] செயல் இழப்பு வரை நடக்கலாம்.

இனிவரும் காலங்களில் அஞ்சலிகளும், இறந்தவரை மகிழ்வோடு வழியனுப்பு கொண்டாட்டங்களும் வீட்டோடு இருக்கட்டும். மற்றவர்களையும் மின்சாரங்களையும் துன்புறுத்தாமல் இறுதி ஊர்வலங்கள் இருக்கட்டும். நம் துன்பங்களை மற்றவருக்கு கடத்த வேண்டாம்.

