கல்யாண மன்னன் - FIVE WIFE ! MY LIFE !
மேக்னா’ஸ் வேறமாரி புரொடக்சன் மற்றும் பாக்கியமலை திரைக்கூடம் இணைந்து தயாரிக்கும் படம் கல்யாண மன்னன்.
ஒரு காதலியுமே கெடைக்காம "மொரட்டு சிங்கிளா” கவலையா வாழ்ற ஒருத்தனுக்கு... அதிர்ஷ்டம், லக், யோகம் இதெல்லாம் ஒன்னா சேர்ந்து வந்த மாறி... நான் ஸ்டாப்பாக அவனுக்கு ஐந்து கல்யாணம் நடக்குது.
கலாட்டாவுல கல்யாணம் நடக்குது... கல்யாணத்துல கலாட்டா நடக்குது... அவன் பண்ண அந்த ஐந்து கல்யாணத்தால அவன் வாழ்க்கயே தலைகீழா மாறுது. நொடிக்கு நொடி காமெடி சரவெடியா ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏற்காடு, கள்ளக்குறிச்சி, வாணாபுரம், சங்கராபுரம் பகுதிகளில்...
மலேசியாவில் 999, ஹார்பர், லக்கிநன் ஆகிய திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, கதாநாயகியாக நடித்த "மேக்னா" இப்படத்தை தயாரித்து கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்ற கதாநாயகிகள் மீனாட்ஷி, தீபிகா, ஸ்னேகா, ரன்விதா சென்னப்பா, சந்தானபாரதி, மகாநதி சங்கர், D.S.R.. பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, கதையின் நாயகனாக நடித்து இயக்குகிறார் B.V.காவியன். ஒளிப்பதிவு: K.S.முத்து மனோகரன், இசை: சார்லஸ் டானா, எடிட்டிங் : M.K.விக்கி, நடனம் : பாலகுமார், ரமேஷ் கமல், இணை தயாரிப்பாளர்கள்: ராஜேஸ், N கோவிந்தசாமி, குழந்தவேலு, சாம்ராஜ்.

