கிங்டம் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இது ஒரு கற்பனைக் கதை என்று போட்டு விட்டார்கள். அந்த கற்பனை கதையை பற்றி முதலில் பார்ப்போம்,
1920 -ல் ஆந்திர மாநிலத்தில் காக்கன் குலம் என்ற பகுதியில் வாழ்ந்துவரும் மழைவாள் மக்களை கொன்று குவிக்கிறது ஆங்கிலேயே அரசு, அதில் தப்பிப் பிழைத்த பலர் இலங்கைக்கு சென்றும் அங்கிருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவில் தஞ்சம் அடைகிறது. ஆங்கிலய ஆட்சி முடிந்ததும் அவர்கள் இந்தியா திரும்ப வருகிறார்கள்,
இந்திய அரசாங்கம் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விடுகிறது. மீண்டும் இலங்கைக்கு வந்தவர்களை சிவில் வார் தொடங்கப்பட்டதால் உள்ளூர் மக்களும் ஏறுக்கொள்ள மருப்பதாகவும் உங்களுக்கு வாழ வழி வேண்டும் எனில் கடத்தல் தொழில் செய்யும் படியும் ஒடியப்பன் என்ற தமிழ் பேசும் கும்பல் மிரட்டுவதாக படத்தில் காட்டப்பட்டு உள்ளது. அப்படி கடத்தல் தொழில் செய்யும் தமிழ் பெயர் உள்ள முருகன் என்பவனின் தலைமையில் இயங்கும் கும்பல் மழைவாள் மக்களை இன அழிப்பு செய்வது போலவும் காட்டப்பட்டு உள்ளது. இது தான் நாம் தமிழர் கட்சி தொண்டர்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.
படம் தொடக்கத்திலேயே 1920 ஆந்திர மாநிலம் என முரணான தகவலுடனே தொடங்குகிறது. கி.பி.1920- களில் மெட்ராஸ் மகாணமாக தான் இருந்தது. இந்திய சுதந்திரம் பெற்று 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தான் மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இப்படி முரணான தகவல்களுடன் ஆரம்பிக்கப்பட்ட படம், இந்திய அரசு தன் சொந்த மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகிறது. ஆனால் திரும்ப வந்தவர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டு இருப்பதுவே நாம் அறிந்தது. குடியுரிமை தரவில்லை என்பது மட்டுமே உண்மை.
மேலும் இந்திய அரசின் தேவை என்ன எதனால் நாயகனை அல்லது அதற்கு முன்பும் உளவு வேலை பார்க்க இலங்கைக்கு ஆட்களை அனுப்பி உள்ளது என்றும், இலங்கையின் கடத்தல் தொழிலால் இந்திய அரசுக்கு என்ன பாதிப்பு என்பது பற்றியும் திரைக்கதையில் தெளிவில்லை. ஒரு கட்சியில் இந்திய உளவுதுறை அதிகாரி இது போர் என்று கூறுகிறார் என்ன போர், யார் யாருடன் போர், இதில் இந்திய அரசின் பங்கு என்ன என படத்தில் எங்கும் கூறுவதாக தெரியவில்லை.
இந்திய மழைவாள் மக்களை கொன்று குவிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய உளவுதுறை இயங்குவதாகவே காட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களே திரைகதையில் இல்லை.
இந்தியாவில் இருந்து தப்பி சென்று இலங்கையி அருகில் இருக்கும் ஒரு தீவில் வசிக்கும் மக்களில் ஒருவர் கூட அந்த தீவில் விவசாயம் செய்யவோ, மீன்பிடி தொழில் செய்யவோ விரும்பாமல் கடத்தல் தொழில் செய்ய அவர்கள் முன் வருவது ஏன் இயக்குனரே !
இதில் தமிழக கும்பல் நிர்பந்தம் தான் காரணம் எனக் கூறுவது கதைக்கு துளியும் கூட பொருந்தவில்லை, மேலும் அந்த தீவு மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அடையாள அட்டை வழங்கி உள்ளது அதை இலங்கை இராணுவ அதிகாரிகள் சரிபார்ப்பது போன்ற காட்சிகளும் உள்ளன. அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி இருக்கிறது என்றாலே ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது தானே அர்த்தம்!
மருந்துக்கு கூட இலங்கையில் உள்ள மற்ற இனத்தவர்கள் இவர்களை பிழைப்பு செய்யவிடாமலோ, வாழ விடாமலோ செய்வதாக படத்தில் இல்லை என்பது நெருடலே.
சிங்களத்தில் எடுக்கப்பட வேண்டிய படம் போல இருக்கிறது இப்படம். இந்திய அரசாங்கத்தையும், இலங்கையில் உள்ள தமிழர்களையும் மட்டுமே தவராக சித்தரிக்கப்பட்டு உள்ளது இப்படம்.
சரி நாயகன் பாத்திரமாவது உருப்படியாக வடிவமைக்கப்பட்டு உள்ளதா என்றால் அப்படி செய்துவிட மாட்டேன் என்பதில் தனி கவனம் செலுத்தி இருப்பார் போல, கிங்டம் திரைப்படம் முழுவதும் தெளிவற்ற நிலையிலேயே ஆரம்பித்து, குழப்பத்திலேயே பயணித்து, குழப்பத்திலேயே முடிகிறது.
உண்மையில் படமானது ஆங்கிலேயர் மழைவாள் மக்களை கொல்வதில் அராம்பித்து அப்போதே முடிந்துவிடுகிறது அது முதல் வர்சன். அதையே இந்திய வர்சனாக எடுத்து இரண்டாம் வசனாக நமக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
படத்தில் நாயகன் யார்?
கதையின்படி நாயகன் என்பவன் யார் எனில் படத்தில் கூறப்படும் நாயகனின் அண்ணனின் கதாபாத்திர வடிவமைப்பு தான் நயகனாக தெரிகிறது.
விஜய் தேவாரகொண்டா [சூரி] கதைப்படி ஒரு கான்ஸ்டபிள், இந்திய அரசாங்க உயர் அதிகார்கள் ஒரு உளவுதுறையில் பணிபுரிய முன் கோவம் உள்ளவன் என்ற ஒற்றை அடிப்படை தேர்வில் பாஸாகியதால் அண்டை நாடான இலங்கைக்கு ஒரு முக்கியமான உளவு வேலைக்கு ஆள் எடுக்கிறார். தன் அண்ணனை தேடிக்கொண்டிருப்பவனுக்கு, உன் அண்ணன் தான் அங்க டான் அவனை கண்கானிக்க தான் உன்னை வேலைக்கு அனுப்புகிறேன் என கூறுகிறார்.
கதாநாயகனான சூரி, தன் அண்ணன் [சிவா] குடிகார தந்தையை கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவிடுகிறார் அவரை தேடிக் கண்டுபிடிப்பது தான் தன் வாழ் நாள் இலட்சியம் என்பவனுக்கு கொடுக்கப்படும் அசைன்மெண்ட் இது.
இந்திய அதிகாரிகளின் ஆட்கள் தேர்வை நகையாடுகிறது இப்படம் மேலும், இவர் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டே உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாதவர் உயர் அதிகாரிகளை அடித்தவர். என்பது அறிந்தும் இவரை இப்படி ஒரு முக்கிய மான பணிக்கு அனுப்பி வைப்பதாக ஒரு திரைக்கதை.
யாருக்கும் உண்மை இல்லாதவர் நாயகன். போன இடத்திலும், தான் தான் உங்களை காப்பாற்ற வந்த கடவுள் அரசன் என கூறுவதையும் மகிழ்ச்சியோடு ஏற்று அவர்களை ஏமாற்றுகிறார். ஆனால் இவர் அண்ணனோ, தன் தம்பி செய்த கொலைக்கு பழி ஏற்றுக்கொண்டு இலங்கை வந்து அந்த மக்களுக்கு உடன் இருக்கிறார் மக்களுக்காகவும், தம்பிக்காகவும் உயிரையும் விடுகிறார். இவர் தான் இப்படத்தில் நாயகனாக தெரிகிறார்.
ஈழத் தமிழர்கள் குறித்து
மழைவாள் மக்களை அடிமைப்படுத்தவும், இன அழிப்பில் ஈடுபடுவது போலவும் ஒடியன் மற்றும் அவரது மகன் முருகன் தலைமையிலான கும்பலை காட்சிப்படுத்துகிறது. மேலும் தமிழர்களை இழிவாக்கும் விதமாக, தமிழர்கள் கடத்தல் தொழில் செய்கிறார்கள், வன்முறைக்கு தமிழர்களை இணைக்கும்படி திரைகதை அமைத்திருப்பது வேதனை உண்டாக்குகிறது. இந்திய அரசாங்கம் தான் இன அழிப்புக்கு ஒரு முக்கிய காரணம் எனவும் காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

