ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி எதிராக வீரியமாக செயல்படாத காங்கிரசால் இந்தியா பின்னடைவு!
அறிமுகம்
காங்கிரசு, இந்தியாவின் மிகப்பெரிய தேசிய எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் பலவீனமாக உள்ளன. இதனால், பிஜேபி ஆட்சியின் போது இந்தியா வளர்ச்சியில் 50–60 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கப்பட்டு, மத அடிப்படையிலான பிளவுகளால் பாகிஸ்தான் பிரிவினை காலத்தை நினைவூட்டும் சூழல் உருவாகியுள்ளது.
காங்கிரசின் பலவீனம்
- மன்னர் வாரிசுகள்: செயல் வீரர்களாக இருக்க வேண்டிய தலைவர்கள், செயல்படாத வாரிசுகளாகவே தோன்றுகின்றனர்.
- ஆர்.எஸ்.எஸ் ஆட்களை காங்கிரசில் இருந்து களை எடுக்காதது பிஜேபியின் வெற்றிக்கே மறைமுகமாக செயல்படுகிறார்கள்
- போராட்டங்கள் மக்களிடம் சென்றடையாதது: நாடாளுமன்றம், சட்டமன்றம் மட்டுமே களமாக இருந்து, மக்களின் இயக்கமாக மாறவில்லை.
- சமூக ஊடகங்களில் தாக்கம் குறைவு: பிஜேபி சமூக ஊடகங்களை வலுவாகப் பயன்படுத்த, காங்கிரசு அதே அளவிலான தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.
தற்போதைய சூழல்
இந்தியாவை சவால்கள் சூழ்ந்துள்ளன:
- எப்ஸ்டீன் ஃபைலில் மோடி & மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெயர்கள்
- விவசாயிகளை பாதிக்கும் அமெரிக்க ஒப்பந்தங்கள்
- அமெரிக்க 18% வரிகள்
- ட்ரம்பின் மிரட்டல்கள்
- சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு
- மக்களின் ஒற்றுமை சிதைவு
- எளிய மக்களின் பொருளாதார சிதைவு
- தேர்தல் முறைகேடுகள்
- மணிப்பூர் வன்முறைகள்
- காய்கறி, அரிசி, பருப்பு எண்ணெய் முதல்விலைவாசி கடும் உயர்வு
- அமலாக்கத்துறை, வருமானவரி துறை மூலம் பிஜேபி கூட்டணியில் சேர வேண்டும் என மிரட்டல் முன்னால் முதல்வர் குற்றச்சாட்டு
- டெல்லியில் குழந்தைகள் பெண்கள் கடத்தல் அதீத அளவில் அதிகரிப்பு
- டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கறிக்கர் மீது தாக்குதல்- உச்ச நீதி மன்றம் சட்டத்தின் ஆட்சி தோல்வி என கண்டிப்பு
இத்தகைய சூழலில், காங்கிரசின் பலவீனமான பிஜேபி எதிர்ப்பு குரல் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
திராவிட மாடலின் தேவை
தென் மாநிலங்களில் நிரூபிக்கப்பட்டது: கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சி, சமூக ஒற்றுமை மூலம் முன்னேற்றம்.
இந்திய மக்களின் வளர்ச்சிக்கும் உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கும் திராவிட மாடலே தற்போதைய தேவை.
இதற்கு மிகச்சிரந்த உதாரணம் மோடி ஆட்சிக்கு வந்தபின்பு என எடுத்துக்கொண்டால் கூட வட மாநிலங்களுக்கு அதிக அளவில் பிஜேபி அரசு நிதி ஒதுக்கியும் அம்மாநிலங்கள் கல்வியிலோ, பொருளாதாரத்திலோ மருத்துவத்திலோ உள் கட்டமைப்பிலோ வளர்ச்சி அடையவில்லை. மாறாக சாதி, மத சண்டைகளில் அதீத வன்முறை நிகழ்ந்து வருகிறது.
வட மாநிலத்தில் நடந்த நிகழ்வும்- தமிழ் நாட்டில் நடந்த நிகழ்வும் ஓர் ஒப்பீடு : ஒரு இஸ்லாமியரின் கடையில் அதன் பெயரை மாற்ற சொல்லி கலவரம் செய்ய ஒரு கும்பல் முயற்றி அதே வேலையில் தமிழகத்தில் இஸ்லாமிய தர்கா திறப்புக்கு இந்து, கிரிஸ்தவ மக்கள் சீர்வரிசை
தென் மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது அதற்கு காரணம் கல்வியில் தென் மாநிலங்கள் கவனம் செலுத்தியதே. கல்வியை நோக்கிய நகர்வுக்கு தமிழகத்தில் வேரூன்றிய திராவிட தலைவர்களின் சிந்தணை தான் காரணம்.
தமிழ் நாட்டில் சுதந்திர இந்தியாவிற்குப் பின் அந்தந்த கால கட்டங்களும் ஆளும் தலைவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்களையும் அதனால் ஏற்பட்ட வளர்ச்சியையும் பார்த்து மற்ற அண்டை மாநிலங்களும் ஒரு முன் மாதிரியாக கல்வி மற்றும் நல திட்டங்களை அங்கு கொண்டு சென்றதன் விளைவே இது அதிகமாக கூறுவதாக தோன்றலாம் அதன் வரலாறுகள் அப்படிதான் உள்ளது என்பதே உண்மை. உதாரணமாக
- உதாரணங்கள்:
- சத்துணவு திட்டம்
- அம்மா உணவகம்
- மகளிருக்கு இலவச பயணம்
- முக்கிய அம்சம்: மத ஒற்றுமை, சமூக நலன், கல்வி முன்னேற்றம். உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளர்ச்சி போன்றவை
ஏன் திமுக தேசிய அரசியலை நோக்க வேண்டும்?
- காங்கிரசு பலவீனமாக உள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அளவிலேயே சுருங்கியுள்ளது.
- ஆம் ஆத்மியின் குரலை தேடும் சூழலில் உள்ளது, திரிணாமுல் காங்கிரசு ஆகியவை தேசிய அளவில் வலுவாக செயல்படவில்லை.
- ஆர்.எஸ்.எஸ்-பிஜேபியின் பாசிஸ்ட் அரசியலை எதிர்க்க, திமுக காங்கிரசுடன் இணைந்துள்ளது.
- எனவே, தேசிய அளவில் மாற்றுக் கட்சியாக திமுக முன்னேற வேண்டும்.
முடிவு
ஆர்.எஸ்.எஸ். ஆரிய மாடல் இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியுள்ளது.
திராவிட மாடல், இந்து–இஸ்லாமியர்–கிரிஸ்துவர் ஒற்றுமையை வலுப்படுத்தி, கல்வி மற்றும் நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.
மக்களுக்கான வளர்ச்சி மாடல்:
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கும், மக்களின் ஒற்றுமைக்கும், உலகளவில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் திராவிட மாடலே தேவை.

