தமிழ் நாடு பல்வேறு மாவட்டங்களில் திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு, தமிழக அரசு கிங்டம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை.

NTK protests

Love Matrimony

தற்பொழுது திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் விஜய் தேவர் கொண்ட நடித்த கிங்டம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்கை முற்றுகையிடுவோம் என அறிவித்திருந்தனர்.

NTK protests

 கிங்டம் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களை குறித்து அவதூறான காட்சிகள் இருப்பதாக கூறி இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் தமிழகத்தில் திரையிட்ட அனைத்து இடங்களிலும் இத்திரைப்படத்தை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் இன்று திரையரங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு திரையரங்கிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்  தலைமையிலான அக்கட்சியினர் திரையரங்கிற்கு  சென்று மேலாளரிடம் திரைப்படத்தை நிறுத்த வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கிங்டம் திரைப்படத்தின் பதாகைகளையும் அகற்றுமாறு கூறியுள்ளனர்.

மேலும் போராட்டக்காரகளை தமிழக காவல் துறையினர் தடுத்தும், கைது செய்வதும் போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொண்டனர்

NTK protests

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் கூறும் பொழுது தமிழக முழுவதும் இப் திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறினர்.மேலும் தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கையை அடுத்து திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது மேலும் திரையரங்க வளாகத்தில் இருந்த பேனர்களை திரையரங்க ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.