ராகுல்காந்தியின் கேள்விகள்!
1. மின்னனு வாக்காளர் பட்டியலை வெளியிடாதது ஏன் ?
2. காணொளி ஆதாரங்களை அழிப்பது ஏன்?
3. வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?
4. கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதிர்க் கட்சிகளை மிரட்டுவது ஏன்?
5. பாஜக-வின் ஏஜெண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்
என அடுக்கடுக்காக கேள்விக் கனைகளை தொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
07-08-2025 [நேற்று] ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்குகள் திருட்டு என அதர்கான ஆவணங்களை வெயிட்டார்
ஆவணங்கள் பின் வருமாறு

· ஓரு அறை கொண்ட வீட்டில் 80 பேர் இருப்பதாக வாக்காளர் பட்டியல்
· வீட்டு எண் 0 [சுழியம்] என ஆயிரத்திரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள்
· தந்தை பெயர்: ilsdfhug, dfojgaidf, என பல ஆயிரம் வாக்காளர்கள்
· தெரு பெயர் 0 [சுழியம்] என பல ஆயிரம் வாக்காளர்கள் இந்த மூன்று விதமான வாக்காளர்கள் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர் என பட்டியலை வெளியிட்டார்.
· 4000 வாக்காளர்களின் புகைபடங்கள் அடையாளம் காணாதபடி மிகவும் சிறிய புகைப்படம் கொண்ட வாக்காளர்கள்.
· ஒரு தனியார் மது நிருவனத்தின் முகவரியில் 68 வாக்காளர்கள் உள்ளனர் என அந்த நிருவனத்தின் புகைபடங்களையும் பட்டியலையும் வெளியிட்டார்.
· ஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்கு அளிக்குபடி உள்ள வாக்காளர் எண்ணிக்கை 11,965 வாக்காளர்கள்
· ஒரே நபர் 4 வாக்குசாவடிகாளின் வாக்காளர் பட்டியலில் இடம்
· பல வாக்காளர்கள் பல தடவை ஓட்டு போட்டதாக அதர்கான பட்டியலை வெளியிட்டார்.
· சில வாக்காளர்கள் பல்வேறு மாநிலக்களில் இடம் பெற்றுள்ளனர் எனவும் கூறினார்.

இப்படி அடுக்கடுக்கான ஆவணங்களையும், கேள்விகளையும் முன் வைத்த ராகுல்காந்தியிடம், இந்திய தேர்தல் ஆணையம் இதையெல்லாம் உறுதிமொழி பத்திரமாக தரவேண்டும் என பதில் கூறிய நிலையில் தான், தேர்தல் ஆணையத்தை பார்த்து மீண்டும் கேள்விகளை முன்வைத்தார்.

