“மனிதம்” இந்த உலகம் இயங்க தேவையான உண்ணதமான சிந்தனை.

அதை தவித்தால் மனித இனம் விரைவில் அழிந்து போகும்.

Love Matrimony

கர் நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக சுலைமான் கொரிநாயக் என்பவர் சிறப்பான முறையில் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் அவர் மாற்று [இஸ்லாம்] மத்ததை பின்பற்றும் நபராக இருப்பதால், அவரை பணியிடம் மாற்ற ஸ்ரீராம சேனா என்ற இந்து இயக்கத்தை சேர்ந்த சாகர் பாட்டில், கிருஷ்ணா மதார் மற்றும் மகன்கவுடா பாட்டில் ஆகிய மூவரும், அரசு பள்ளியின் குடி நீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்து இருக்கிறார்கள்.

ஒரு அரசு பள்ளியில் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த அனைத்து மதத்தினரது பிள்ளைகளும் படிப்பார்கள் என்பது பற்றியும் அவர்கள் சிறார்கள் என்பது பற்றியும் அவர்கள் தான் நாளைய எதிர்கால சமூகத்தினர் என்றும் கூட சிந்திக்க விடாமல் தடுத்து இருக்கிறது அவர்களின் மத வெறி, இதனால் 11 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள், அந்த 11 மாணவர்களில் எத்தனை பேர் இந்த மதவெறி பிடித்த மூவர்கள் சாந்த மதத்தினராக இருக்கக்கூடும் என்பது பற்றிய கவலை கூட இல்லை, இதை ஏன் இப்படி கேள்வி எழுப்புகிறோம் என்றால் மதவெறி என்பது தாம் சாந்த மதத்தினர் பற்றியும் துளி கூட கவலை கொள்ளாது அதன் நோக்கம் அழிவு மட்டுமே அதனால் தான் மனிதனுக்கு மதம் பிடிக்க கூடாது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்த மூவரின் செயலானது நல்ல வேலையாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்யப்பட்டு உள்ளார்கள். மதவெறி பிடித்த அதிகாரம், அதிகாரிகள் அங்கு இருந்திருந்தால் இது மிகப்பெரிய கலவரத்திற்கு வழிவகுத்திருக்கும் என்பது நிதர்சனம். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் இல்லை.

வழிபாடு என்பது நம்மை பண்படுத்த மட்டுமே, ஆக்கிரமிப்பு செய்து அதிகாரம் செலுத்த அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வழிபாடு என்பதே மன அமைதிக்காகத் தானே, மற்றவரை துன்புறுத்தி ஒருபோதும் அமைதியை பெற முடியாது, மற்றவர்களை துன்புறுத்தினால் அந்த செயலின் எதிர்வினை என்பது நிழல் போல துரத்திக்கொண்டே வரும், நிரந்தரமாக இருளில் தள்ளிவிட்டே மறையும்.

வாருங்கள் சக மனிதரோடு நட்பு பழகி மகிழ்வுடன் வாழ்வோம்…